மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக 2 தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வார்டுகளில் தற்போது ஒரு பெண் உள்பட 12 பேர் சளி, இருமல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று இந்த வார்டுகளை பார்வையிட்டார்.
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் டாக்டர்களிடம் தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
திருச்சி அரசு மருத்துவ மனையில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்ததும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துவாக் குடி பகுதிக்கு வந்த 2 மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தற்போது திருச்சி அரசு மருத்துவ மனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த பரிசோதனை முடிவு வந்ததும் அவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து கண்காணிப்பு
பொதுமக்கள் அடுத்த 14 நாட்களுக்கு தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதும் நல்லது. கொரோனா வைரஸ் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என ரத்த பரிசோதனை முடிவு வந்ததும் சிகிச்சையில் இருப்பவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும், அவர்களது முகவரி, செல்போன் எண் வாங்கப்பட்டு இருப்பதால் அவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story