கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சளி, இருமல் இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணியலாம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சளி, இருமல் இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணியலாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ராமன் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் கை கழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதோடு, இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் சோப்பு போட்டு கை கழுவினர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் ஏதுமில்லை. இந்த வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்கள் சோப்பு போட்டு கை கழுவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் சுற்றுலா மற்றும் விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புக்காக அனைவரும் முகக்கவசம் அணிய தேவை இல்லை. சளி, இருமல் இருப்பவர்கள் மட்டும் முகக்கவசங்களை அணியலாம். மேலும் பயன்படுத்திய முகக்கவசங்களை குப்பை தொட்டியில் போடாமல் அதை அழித்துவிட வேண்டும். இதன் மூலம் குப்பை சேகரிக்கும் சுகாதார பணியாளர்களின் ஆரோக்கியத்துக்கும், வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும் உதவிட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story