அனல் மின்நிலைய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


அனல் மின்நிலைய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீஞ்சூர்,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலை என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் ஏதும் இல்லை.

இவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் மனம் உடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று வல்லூரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய அலுவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று என்ஜினீயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்ஜினீயர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story