சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் ஓட்டல்களில் பணியாற்றக்கூடாது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அறிவிப்பு
சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் ஓட்டல்களில் பணியாற்றக்கூடாது என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நட வடிக்கைகளை உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-
கோவை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த துறை தலைவர்கள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
கிருமி நாசினி, சோப்பு
அதன்படி, ஓட்டல் மற்றும் தேநீர் கடைகளில் பொதுமக்கள் தங்களின் கைகளை கழுவதற்கு தேவையான கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்டவை வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உணவகங்களில் பணிபுரிபவர்கள் அடிக்கடி தங்களது கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் ஓட்டல்களில் பணியாற்றக் கூடாது. சுத்தம் செய்வது தொடர்பான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு 100 சதவீதம் வேக வைக்கப்பட்ட உணவுகளை சூடாக பரிமாற வேண்டும்.
விழிப்புணர்வு நோட்டீஸ்
நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு வரும் வெளிநாட்ட வர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டு, வெளிநாட்டவர்களின் விவரம் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையார், பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைகட்டி பகுதிகளில் உள்ள உணவு சார்ந்த நிறுவனங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து உணவகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story