கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து குறைப்பு கலெக்டர் தகவல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தினமும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பஸ்நிலையம் முழுவதும் கிருமிநாசினி மருந்தை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து பஸ்களின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கலெக்டர் விஜயலட்சுமி, காமராஜர் பஸ்நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளித்தல், பயணிகளுக்கு கைகழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை பார்வையிட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
பஸ் போக்குவரத்து குறைப்பு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கின்றன. மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி வாகனங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மண்டலத்தில் 881 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் 800 பஸ்கள் தினமும் இயக்கப்படுபவை ஆகும். வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பகுதியிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சிகிச்சை
பொதுமக்கள் அனைவரும் தன்சுத்தத்தை பேண வேண்டும். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு முக கவசங்களை கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் கணேசன், திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கை கழுவும் முறை
நத்தம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலக வளாகத்தில் கொேரானா விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி பேசினார்.
இதைத்தொடர்ந்து கை கழுவும் முறை, வருமுன் காப்பது, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, முக கவசங்கள் அணிவதன் அவசியம், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் உடனடியாக அரசுமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், டிரைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு உறுதிமொழி
இதேபோல் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமை தாங்கினார். அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சரவணபாண்டியன் வரவேற்றார்.
முகாமில் கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழியை பேரூராட்சி ஊழியர்கள் எடுத்து கொண்டனர். இதில் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொடைரோடு ரெயில் நிலையம் வெறிச்சோடியது. இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள கார், வேன் டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொடைரோட்டில் பழக்கடைகள், ஓட்டல்களும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் உமா தலைமை தாங்கினார். தாசில்தார் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பழனி வட்டார மற்றும் நகர சுகாதாரத்துறை, பழனி, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆயக்குடி, கீரனூர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸ் துறையினர் கலந்து கொண்டனர்.
அப்போது சப்-கலெக்டர் உமா பேசுகையில், மக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒலிபெருக்கி முலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலங்களில் கைகழுவுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதுடன் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். அதற்கான பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் முறையாக ஆய்வு மேற்கொண்டு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழனி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். இருக்கைகளின் விரிப்பு முறையாக மாற்றப்பட வேண்டும். இதனை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story