நெல்லை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்
நெல்லை மாவட்ட உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல்
நெல்லை மாவட்ட உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட, அதை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் பெற்று கொண்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்கள், 18 பேரூராட்சிகள், 2 நகரசபைகள் மற்றும் ஒரு மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. அதன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,125 வாக்குச்சாவடிகளும், நெல்லை மாநகராட்சிக்கு 411 வாக்குச்சாவடிகளும், 2 நகரசபைகளுக்கு 87 வாக்குச்சாவடிகளும், 18 பேரூராட்சிக்கு 338 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 94 ஆயிரத்து 766 ஆண் வாக்காளர்கள். 2 லட்சத்து 2 ஆயிரத்து 341 பெண் வாக்காளர்கள். இதர வாக்காளர்கள் 33 ஆகும். 2 நகரசபைகளில் 72 ஆயிரத்து 680 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 35 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்கள், 37 ஆயிரத்து 455 பெண் வாக்காளர்கள் ஆவார்கள். இதர வாக்காளர்கள் 3 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரிடரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்து இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story