கஞ்சா விற்றவர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி சப்–இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன் மற்றும் போலீசார் இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அருமநல்லூர் அனந்தனார் பகுதியை சேர்ந்த சோபனதாஸ் (வயது 46), என்பதும் அவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சோபனதாசை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story