கடலை உடைப்பு எந்திரத்தில் சிக்கி மாணவனின் கால் துண்டானது; உரிமையாளர் கைது


கடலை உடைப்பு எந்திரத்தில் சிக்கி மாணவனின் கால் துண்டானது; உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 21 March 2020 3:30 AM IST (Updated: 20 March 2020 6:47 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் கடலை உடைப்பு எந்திரத்தில் சிக்கி மாணவனின் கால் துண்டானது. உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு, 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் அம்பலத்தரசு (வயது 54). இவருக்கு சொந்தமான கடலை உடைப்பு ஆலை ஆற்காடு புதிய வேலூர் ரோட்டில் உள்ளது. நேற்று நிலக்கடலை உடைக்கும்போது அங்கு வேலை செய்த ஆற்காடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த 6–ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாஸ்கரன் (வயது 11) என்பவரின் வலதுகால் கடலை உடைக்கும் எந்திரத்தில் சிக்கி துண்டானது.

உடனடியாக மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பலத்தரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story