வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலம் முற்றுகை
வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தை சிறிது நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் ஊராட்சிக்குட்பட்ட குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தை சிறிது நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், அனுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் முதலி, துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 50 குடும்பங்கள் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் ஆகியவை முறையாக அரசுக்கு கட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story