புதுக்கோட்டை அருகே போலீஸ் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே போலீஸ் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
புதுக்கோட்டை அருகே போலீஸ் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரூரணி சிறைக்கு...
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி போலீசார், மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக பொன்முத்துக்குமார் (வயது 27), பெருமாள் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பேரூரணி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சூரங்குடி போலீசார் செல்வராஜ் (30), வீரமணி (28), முத்துசெல்வம் (31) ஆகியோர், பொன்முத்துக்குமார், பெருமாள் ஆகிய 2 பேரையும் போலீஸ் காரில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலையில் பேரூரணி சிறைக்கு புறப்பட்டனர். காரை போலீஸ்காரர் செல்வராஜ் ஓட்டினார்.
கார் கவிழ்ந்தது
புதுக்கோட்டை அருகே மங்களகிரி பகுதியில் சென்றபோது ஒரு மாடு சாலையை கடக்க முயன்றது. இதனால் மாடு மீது மோதாமல் இருக்க செல்வராஜ் காரை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த போலீஸ்காரர்கள் செல்வராஜ், வீரமணி, முத்துசெல்வம் மற்றும் பொன்முத்துக்குமார், பெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story