குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
விளாநல்லூர் ஊராட்சி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள விளாநல்லூர் ஊராட்சி பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன.
இதனை தடுக்க ஊராட்சி மன்றம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 9 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இதன் தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சதீஷ், ஆணைபோகி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு 9 கண்காணிப்பு கேமராக்களையும் தொடங்கி வைத்து பேசினர்.
முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story