கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு 208 கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்கள் அனைத்து மண்டலங்களுக்கும் கமி‌‌ஷனர் வழங்கினார்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக   சென்னை மாநகராட்சிக்கு 208 கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்கள்   அனைத்து மண்டலங்களுக்கும் கமி‌‌ஷனர் வழங்கினார்
x
தினத்தந்தி 21 March 2020 4:30 AM IST (Updated: 21 March 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கா சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் 208 கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்களை கமி‌‌ஷனர் வழங்கினார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் பயிற்சி, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்களை நேற்று ரிப்பன் மாளிகையில் அனைத்து மண்டலங்களுக்கும் மாநகராட்சி கமி‌‌ஷனர் கோ.பிரகா‌‌ஷ் வழங்கினார்.

வடக்கு வட்டாரத்துக்கு 66 எந்திரங்கள், மத்திய வட்டாரத்துக்கு 66 எந்திரங்கள், தெற்கு வட்டாரத்துக்கு 68 எந்திரங்கள் மற்றும் ஒரு பட்டர்பிளை வாகன தெளிப்பான், 7 பெரிய புகைப்பரப்பும் வாகனங்கள் என மொத்தம் 208 கிருமிநாசினி தெளிக்கும் எந்திரங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கமி‌‌ஷனர் கோ.பிரகா‌‌ஷ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

3 ஆயிரம் களப்பணியாளர்கள்

இந்த கிருமி நாசினி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பேருந்து நிலையங்கள், குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள், ஏ.டி.எம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் முழுகண்காணிப்புடன் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிருமி நாசினி தெளிப்பதற்கான நவீன உபகரணங்களை அரசு ஒதுக்கிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்கள் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மீட்டர் தூரம் வரை கிருமி நாசினியை தெளிக்கலாம். சென்னையில் முதல் முறையாக இந்த எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி வருகிற 2 வாரங்கள் தொடர்ச்சியாக, மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் காலை, மாலை வேளைகளில் தெளிக்கப்படும். கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 3 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறிய நிறுவனங்கள் திறந்திருக்கும்

இதுதவிர வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என்ற கணக்குகளும் எடுத்து கொண்டு இருக்கிறோம். பெரிய வணிக வளாகங்கள் மட்டும் மூடுவதற்கு உத்தரவிட்டிருக்கிறோம். மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடுடாது என்பதற்காக மருந்து கடை, பால் கடை, மளிகை கடை போன்ற சிறிய வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருக்கும். சிறிய கடைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமி‌‌ஷனர்கள் குமாரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, கிரே‌‌ஷ் லால்ரின்டிகி பச்சுவாவ், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீ‌‌ஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story