குடும்பநல கோர்ட்டுகளில் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திடீர் ஆய்வு


குடும்பநல கோர்ட்டுகளில்   ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 20 March 2020 8:40 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில், தலைமை நீதிபதி ஆய்வு செய்தார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை அறிய சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில், தலைமை நீதிபதி ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுகளை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முகக்கவசம் அணிந்தபடி திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தேவையில்லாத வழக்குகள் விசாரிக்கப்படுகிறதா? கோர்ட்டு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக உள்ளதா? கோர்ட்டுக்கு வருபவர்கள் தகுந்த முறையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின்னர் அனுமதிக்கப்படுகின்றனரா? என்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மேலும், வைரஸ் பரவாமல் தடுக்க நீதிபதிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

Next Story