கொரோனா வைரஸ் பீதியால் பாதிப்பு கேரளாவை போல் ஏழை தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் கர்நாடக அரசுக்கு குமாரசாமி வேண்டுகோள்


கொரோனா வைரஸ் பீதியால் பாதிப்பு   கேரளாவை போல் ஏழை தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு உதவ வேண்டும்   கர்நாடக அரசுக்கு குமாரசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 March 2020 4:11 AM IST (Updated: 21 March 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பீதியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு கேரளாவை போல் உதவ வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வட்டி தள்ளுபடி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு எடுத்துள்ள சில முடிவுகளால் தினக்கூலி தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்பட ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்த 2 மாதத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அவர்களை தவிர ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்களின் கடன் தவணையை செலுத்த 2 மாதங்கள் விலக்கு அளிக்க வேண்டும்.

வட்டி தள்ளுபடி, மாத உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசு அறிவிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். கொரோனா வைரசை தடுக்க அரசு இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும். கொரோனா பாதித்த மக்களுக்கு உதவ கேரளா அரசு ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளது.

மக்களிடையே பீதி

கடனுக்கு உதவி, 2 மாதங்களுக்கு உதவித்தொகை, குறைந்த விலையில் உணவு, சுகாதார சேைவயை வழங்குவதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது. கேரளாவின் இந்த திட்டம் நமக்கு ஏன் மாதிரியாக இருக்கக்கூடாது?. கர்நாடகத்தில் இதுவரை ெகாரோனா வைரசுக்கு 15 பேர் (இறந்தவர் உள்பட) பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாநிலத்தில் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story