கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருப்பத்தூர், மானா மதுரை, கோட்டையூர், புதுவயல் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி,
நாட்டில் கெரோனா வைரஸ் நோய் பரவி வருவதை தொடர்ந்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் நோய் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. கோட்டையூர் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மதுரை மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சாய்ராம், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர்கள் மாடசாமி, சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர்கள் செங்கதிர் செல்வன் , அன்புச்செழியன், கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இதில் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து திட்ட அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.
இதேபோல் புதுவயல் பேரூராட்சியில் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலையில், பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், வங்கிகள், வழிபாட்டு தலங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு. மேலும் பொதுமக்களுக்கு கைகழுவும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சி இயக்குனர் ராஜா தலைமையில், பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மானா மதுரை புது பஸ் நிலையத்தில் செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் தங்கராசு, பாலு முன்னிலையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கும், பயணிகள் அமரும் இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் திருப்பத்தூர் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் அண்ணாசிலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு கைகழுவுதல் தொடர்பான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம்மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தரராஜ், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், திருவிழாக்கள், சந்தைகள் ஆகிய இடங்களுக்குஅழைத்துச்செல்ல வேண்டாம். மேலும் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் தென்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், பணிபுரியும் இடங்களையும் தினசரி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story