முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று கொள்ளலாம் ; கலெக்டர் தகவல்


முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று கொள்ளலாம் ; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 March 2020 4:00 AM IST (Updated: 21 March 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் முதல்–அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டையை இனி திருப்பத்தூரில் பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

திருப்பத்தூர், 

தமிழக முதல்–அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் சார்பில் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவ காப்பீடு அட்டையை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வழங்கி பேசியதாவது:–

 தமிழக முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் சார்பில் மாவட்ட மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் குடும்ப வருமான சான்றிதழ் பெற வேண்டும். பின்னர் குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் குடும்ப அட்டை நகல் எடுத்துக் கொண்டு மாவட்ட மருத்துவ அட்டை வழங்கும் இடத்திற்கு வந்து காட்ட வேண்டும்.

கைரேகை, போட்டோ எடுக்கப்பட்டு காப்பீடு அட்டை வழங்கப்படும். காப்பீடு அட்டையை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவிகள் பெறலாம். காப்பீடு அட்டை இதுவரை வேலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே மாவட்ட மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இனி இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ராஜேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ நாயர், திருப்பத்தூர் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் புரட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story