கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவையில் நேற்று மாலை முதல் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து மாநகர் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை,
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையடுத்து இன்று கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று அந்தந்த சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வாகன போக்குவரத்தும் மிக குறைந்த அளவிலேயே இருந்தது.
காலையில் கூட்டம், மாலையில் வெறிச்சோடியது
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (அதாவது நேற்று) காலையில் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும். அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. குறிப்பாக கோவை 100 அடி ரோட்டில் நகைக்கடைகள், எலக்ட்ரானிக்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. காலையில் இருந்த கூட்டம் மாலையில் இல்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story