கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: கேரள மாநில எல்லைகள் மூடப்பட்டன; பஸ்-வாகன போக்குவரத்து நிறுத்தம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் எல்லைகளில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. பஸ், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தேனி,
கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரள மாநில எல்லைகளில் உள்ள கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு நபரும் பரிசோதனை செய்த பின்னரே அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இன்று பஸ், ரெயில்கள் இயக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில், கேரள மாநில எல்லைகளில் உள்ள சாலைகள் நேற்றே மூடப்பட்டன. கேரள மாநிலத்துக்கு பஸ் மற்றும் பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்தும் தேனி மாவட்டத்துக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள்
கம்பம்மெட்டு வழியாக கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செல்வது வழக்கம். நேற்று தொழிலாளர்கள் யாரும் செல்லவில்லை. காய்கறி, பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்பே அனுமதிக்கப்பட்டது.
அதுபோல் குமுளி, போடிமெட்டு வழியாகவும் பஸ்கள், வாகனங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டன. இன்றும் கேரளாவுக்கு வாகனங்கள் இயக்கப்படாது. இதனால் தேனி மாவட்டத்துக்கும் கேரள மாநிலத்துக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Related Tags :
Next Story