கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கை கழுவ பயிற்சி


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கை கழுவ பயிற்சி
x
தினத்தந்தி 22 March 2020 5:05 AM IST (Updated: 22 March 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் கை கழுவ பயிற்சி அளித்தனர்.

புதுச்சேரி,

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

அதில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டதும் ஒரு அம்சமாகும். பொதுமக்கள் அதிகம் கூடும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகம், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை மூட அறிவுறுத்தி உள்ளது. ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கைகழுவுவது, முக கவசம் அணிய சொல்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கை கழுவ பயிற்சி

புதுவை மாநிலத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். புதுவை அண்ணா சாலை சிக்னல், ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் சாலையின் குறுக்கே வரிசையாக நின்று கொண்டு பொதுமக்களுக்கு கை கழுவ பயிற்சி அளித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story