மக்கள் ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரியில் இன்று பஸ்கள் ஓடாது


மக்கள் ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரியில் இன்று பஸ்கள் ஓடாது
x
தினத்தந்தி 22 March 2020 5:25 AM IST (Updated: 22 March 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து புதுவையிலும் இன்று பஸ்கள் ஓடாது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக பிரதமர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு செய்தார். அப்போது பேசப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கீழ் கண்ட நடவடிக்கைகள் எடுக் கப்படுகின்றன.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர் கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வதந்திகளை நம்பாதீர்

வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், தோட்ட பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக் கூடாது. பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்பவேண்டாம்.

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் நலன்கருதி தனியார் பயிற்சி நிறுவனங்கள், தனியார் பயிற்சி மையங்கள் போன்றவைகள் வருகிற 31-ந்தேதி வரை இயங்குவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஸ்கள் ஓடாது

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுப்பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் பார்வையிடப்பட்டு அப்பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏதுவாக தனி மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

இன்று மேற்கொள்ள உள்ள மக்கள் ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து வெற்றிபெற உதவிட வேண்டும். இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது.

புதுவை அரசு எடுத்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.

Next Story