மராட்டியத்தில் வேகமாக வைரஸ் பரவுகிறது: ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதில் மராட்டியம் தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் நேற்று முன்தினம் வரை 52 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் புதிய கொரோனா நோயாளிகளில் 9 பேர் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள். 3 பேருக்கு கொரோனா பாதித்த நபர்களிடம் இருந்து பரவியுள்ளது.
மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52-ல் இருந்து 64 ஆக அதிகரித்து இருப்பது மிகப்பெரிய உயர்வாகும். இதில் 13 முதல் 14 பேருக்கு கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்ததால் வைரஸ் பரவி இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
கொரோனா பரவலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும், சுகாதாரத்தை பேணுவதன் மூலமும், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்
மும்பையில் உள்ள புறநகர் ரெயில்கள் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மட்டும் இயங்கும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே வைரசை எதிர்த்து போராட மக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அரசின் கோரிக்கைக்கு மக்கள் செவிசாய்க்காமல், பொது போக்குவரத்தை தேவையின்றி தொடர்ந்து பயன்படுத்தினால் நாங்கள் வேறுவிதமாக சிந்திக்க நேரிடும். பொது போக்குவரத்துகளில் மக்கள் கூட்டம் குறையாத பகுதிகளில் முழு அடைப்பு அமல்படுத்தப்படும்.
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி குளிர்ந்த இடங்களிலேயே கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ்வது தெரியவந்தது. எனவே அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் யாரும் ஏர் கண்டிசனை(ஏ.சி.) பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனையையும் பின்பற்ற வேண்டும்.
நாங்கள் வெளிமாநிலங்களுக்கான ரெயில்களை அதிகரிக்க கோரியுள்ளோம். இதனால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் செல்லலாம். இதனால் மும்பை பெருநகரம் மற்றும் புனேயில் ரெயில் நிலையங்களில் கூட்டம் குறையும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மேலும் 7 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உருவாக்கப்பட்டு உள்ளன என்று அவர் கூறினார்.
இதற்கிடையே மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பிரதீப் அரசாணை ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் ஏ.சி. பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட ஏ.சி. அறையில் கொரோனா கிருமிகள் அதிக காலம் தங்கி விடும். எனவே அவசியம் இன்றி ஏ.சி.யை பயன்படுத்த கூடாது. காற்றோட்டமாக இருக்க ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தானே மாநகராட்சி கமிஷனர் விஜய் சிங்கால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக தானே மாநகராட்சி பகுதியில் 10 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. சாலையிலோ அல்லது பொது இடங்களிலோ 10 பேருக்கு மேல் மக்கள் கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தானே மாநகராட்சி பஸ்களில் நின்றுகொண்டு யாரும் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
மராட்டியத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் ஏ.சி. பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. தானேயில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story