கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? கலெக்டர் முன்னிலையில் செயல்விளக்கம்


கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி? கலெக்டர் முன்னிலையில் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 23 March 2020 1:12 PM IST (Updated: 23 March 2020 2:05 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் மலர்விழி முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அனைத்து விதமான சிகிச்சை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் மற்றும் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மலர்விழி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த நோய்தொற்று ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை எவ்வாறு தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும். எத்தகைய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு அந்த நோய்தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்கள் குழுவினர் செயல் விளக்கங்களை அளித்தனர்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரி டீன்(பொறுப்பு) சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் இளங்கோ, உதவி கலெக்டர் தேன்மொழி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தாசில்தார் சுகுமார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story