சிறப்புக் கட்டுரைகள்

குஜராத் மெட்ரோவில் வேலை + "||" + Job in Gujarat Metro

குஜராத் மெட்ரோவில் வேலை

குஜராத் மெட்ரோவில் வேலை
குஜராத் மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் சுருக்கமாக ஜி.எம்.ஆர்.சி. எனப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சீப் ஜெனரல் மேனேஜர், மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், சீனியர் மேனேஜர், சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 135 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியிடங்கள் வாரியான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். எலக்ட்ரிக்கல், டிராக்சன், சிக்னலிங், டெலிகாம், சிவில், ஆர்கிடெக்ட், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.gujaratmetrorail.com/careers/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.