மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தவிர வணிகநோக்கில் இயங்கும் கடைகளை மூடவேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு + "||" + Apart from the essential items Close business-oriented shops Ranipet Collector directive

அத்தியாவசிய பொருட்களை தவிர வணிகநோக்கில் இயங்கும் கடைகளை மூடவேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை தவிர வணிகநோக்கில் இயங்கும் கடைகளை மூடவேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, வணிக நோக்கில் இயங்கும் அனைத்து கடைகளையும் மூடி வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மருந்து கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் ஆகியவற்றை மட்டும் திறக்கலாம். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும், வணிக நோக்கில் இயங்கும் பிற கடைகள் அனைத்தையும் மூடி வைக்க வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தொலை பேசி 04172- 273188, 273166 ஆகிய எண்களில் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அரசு மருத்துவர்களால் சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பிறமாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகள் வழியாக அனுமதிக்கப்படமாட்டாது .

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுக்குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2. காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் - கலெக்டர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை
காய்கறி, மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
3. கொரோனா தடுப்பு குறித்து மேல்விஷாரம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
மேல்விஷாரம் பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
4. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக மின்னணு பயண அனுமதி சீட்டு - கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வணிகர்கள், பொதுமக்கள் வசதிக்காக மின்னணு பயண சீட்டு வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்
மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-