மாவட்ட செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு + "||" + 300 tonnes of stock at Cuddalore port Sending fish to outstations

கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.


தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதன் காரணமாகவும், மக்கள் ஊரடங்கையொட்டியும் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்த மீனவர்கள் நேற்று முன்தினம் கரைக்கு திரும்பினர்.

300 டன்

இதில் மீனவர்களின் வலைகளில் சூரை, திருக்கை உள்ளிட்ட வகை மீன்கள் சுமார் 300 டன் அளவில் சிக்கியிருந்தன. ஆனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டிருந்ததாலும், நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு நடந்ததாலும் வியாபாரிகள் யாரும் மீன்களை வாங்க வரவில்லை. துறைமுக பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் 300 டன் மீன்களும் விற்பனை செய்யப்படாமல், கடலூர் துறைமுகத்திலேயே தேக்கமடைந்திருந்தது. இதன் காரணமாக மீனவர்கள் பிடிபட்ட மீன்களை ஐஸ் பெட்டிகளில் போட்டு தங்களது படகுகளிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனால் நேற்று காலை வரை மீன்கள் விற்பனையாகாததால் மீனவர்கள் பெரிதும் கவலையடைந்தனர்.

அதிகாரிகள் அறிவுரை

இதற்கிடையே நேற்று மதியம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள், மீனவர்களிடையே ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி விலை நிர்ணயம் செய்யாமல் மீன்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். இது தவிர கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் துறைமுகத்திற்கு வந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நிற்க கூடாது என அறிவுரை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் ஊரடங்கையொட்டி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை துறைமுகம் வெறிச்சோடியது
மக்கள் ஊரடங்கையொட்டி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடியது.
2. கடலூரில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி
கடலூரில் உலக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
3. கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து - தமிழக அரசு
2017 ஆம் ஆண்டு ஜூலை 19-ல் கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
4. கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை அமெரிக்க அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் அமைய உள்ள பெட்ரோலிய ஆலை குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
5. காரைக்காலில் மீன் எண்ணெய்-பவுடருக்காக ஒரே நாளில் 48 ஆயிரம் கிலோ கழிவு மீன்கள் ஏற்றுமதி
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், மீன் பவுடர், மீன் எண்ணெய் மற்றும் கோழித் தீவனத்திற்காக நேற்று ஒரேநாளில் 48 ஆயிரம் கிலோ மீன் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.