குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கம்
கொரோனா எச்சரிக்கையாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
கொரோனா எச்சரிக்கை எதிரொலியாக பஸ் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வழக்கமான அளவில் பஸ்கள் இயக்கப்படாமல் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்பட்டன. வெளியூர்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து தேவைக்கேற்ப மட்டுமே பஸ்கள் விடப்பட்டன.
இதன்காரணமாக வந்த பஸ்களில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இடம் பிடிக்க சென்றனர். இதனால் பஸ்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இயல்பு வாழ்க்கை எந்தவகையில் பாதிக்கப்படும் என்று தெரியாத இனம்புரியாத அச்ச உணர்வுடன் மக்கள் இருப்பதால் முன்எச்சரிக்கையாக தங்களின் பகுதிகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் ரோந்து சுற்றி அறிவுறுத்தப்பட்டது. கூட்டமாக கூடாமல், தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். முக கவசம் அணியாமல் சென்றவர்களை எச்சரித்து முக கவசம் அணிய வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story