மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம் + "||" + Truck collision on a motorcycle near Karaimangalam; Bakery shop worker dies

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி கடை தொழிலாளி சாவு தங்கை படுகாயம்
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதி பேக்கரி கடை தொழிலாளி இறந்தார். அவருடைய தங்கை படுகாயம் அடைந்தார்.
காரிமங்கலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மணிகளத்தானூரை சேர்ந்தவர் பன்னீர்ெசல்வம் (வயது33). இவர் பர்கூரில் ஒரு பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை பிரசவத்திற்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.


இதையடுத்து பன்னீர்செல்வம், அவருடைய தங்கை பிரியா(23) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் குழந்தையை பார்க்க தர்மபுரிக்கு வந்து இருந்தனர். பின்னர் நேற்று காலை இவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலையில் சென்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தொழிலாளி சாவு

இந்த விபத்தில் பன்னீர்செல்வம், பிரியா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்து விட்டு சென்றபோது லாரி மோதி பேக்கரி கடை தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்
கூடலூர் அருகே நடுரோட்டில் சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்
கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்.
3. தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்
தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார், தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
4. அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்
அவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: வேன்-பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்
வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது, வேலாயுதம் பாளையம் அருகே வேன்-பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படு காயம் அடைந்தனர்.