மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினம்; மாணவ-மாணவிகள் கருத்து + "||" + Plus-1 history is difficult; Students Opinion

பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினம்; மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினம்; மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பூர், 

பிளஸ்-1 மாணவர்களுக்கு வரலாறு, உயிரியல், தாவரவியல், வணிக கணிதம், நெசவு தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை, அடிப்படை மின்னணு என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. வரலாறு பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவ-மாணவிகள் 2,350 பேர், தனித்தேர்வர்கள் 62 பேர் என்று மொத்தம் 2,412 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 2,011 பேர், தனித்தேர்வர்கள் 47 பேர் என்று மொத்தம் 2,058 பேர் தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 339 பேர், தனித்தேர்வர்கள் 15 பேர் என்று மொத்தம் 354 பேர் தேர்வை எழுத வரவில்லை.

உயிரியல் பாடத்தேர்வை பள்ளி மாணவர்கள் 6,522 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 6,216 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 306 பேர் தேர்வை எழுத வரவில்லை. தாவரவியல் பாடத்தேர்வை பள்ளி மாணவர்கள்375 பேர், தனித்தேர்வர்கள் 4 பேர் என்று மொத்தம் 379 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 321 பேர், தனித்தேர்வர்கள் 3 பேர் என்று மொத்தம் 324 பேர் தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 54 பேர் தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 55 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வணிக கணித பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவர்கள் 1,696 பேர்,, தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 1,697 பேர் எழுதஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் 27 பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,670 பேர் மட்டும் தேர்வை எழுதினார்கள். நெசவு தொழில்நுட்பத்தேர்வை பள்ளி மாணவர்கள் 28 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவர் தேர்வு எழுத வரவில்லை. 27 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.

அலுவலக மேலாண்மை தேர்வை பள்ளி மாணவர்கள் 194 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. 177 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். அடிப்படை மின்னணு என்ஜினீயரிங் தேர்வை பள்ளி மாணவர்கள் 157 பேர் எழுத ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இவர்களில் 8 பேர் தேர்வு எழுத வரவில்லை. 149 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். எந்த வித ஒழுங்கீனமான செயல்களும் இல்லாமல் தேர்வு அமைதியாக நடந்து முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.

தேர்வு எழுதிவிட்டு தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

மணிமொழி (ராமகிருஷ்ணா வித்யாலயா) உயிரியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தன.

வினோதினி (ராமகிருஷ்ணா வித்யாலயா): உயிரியல் பாடத்தேர்வில் நான் படித்திருந்த முக்கியமான பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி விட்டேன்.

தினேஷ் (கே.எஸ்.சி.அரசு பள்ளி): அலுவலக மேலாண்மை தேர்வில் கேட்கப்பட்டிருந்த 1 மதிப்பெண்களுக்கான வினாக்களை தவிர அனைத்து வினாக்களும் மிகவும் கடினமாகவே இருந்தன.

ஹரிஹரன் (கே.எஸ்.சி.அரசு பள்ளி): வரலாறு பாடத்தில் கேட்கப்பட்டிருந்த அனைத்து வினாக்களும் மிகவும் கடினமாக இருந்தது.

அதே போல் வரலாறு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் பெரும்பாலானவர்கள் தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் போலீஸ் பணிக்கு நவம்பர் 4-ந்தேதி உடல் தகுதி தேர்வு
புதுவையில் போலீஸ் வேலையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வு நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.
2. செவிலியர் பணிக்கு எழுத்துத் தேர்வு 15 மையங்களில் நடந்தது
புதுவையில் செவிலியர், வார்டு அட்டெண்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது.
3. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளராக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி புதுவை அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
4. 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பரீட்சை தொடங்கியது இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு
திருச்சி மாவட்டத்தில் 10, 12 வகுப்பு தனித்தேர்வுகளுக்கு 22 மையங்களில் நேற்று பரீட்சை தொடங்கியது. இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினர்.
5. ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை