பிரேசிலில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 11 பேர் பலி


பிரேசிலில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 11 பேர் பலி
x
தினத்தந்தி 23 March 2020 11:04 PM GMT (Updated: 23 March 2020 11:04 PM GMT)

பிரேசிலில் பஸ்-லாரி நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

ரியோ டி ஜெனிரோ,

பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள பாஹியா மாகாணத்தின் தலைநகர் சால்வடாரில் இருந்து பாராகடு நகருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் பிராபோரா நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சாலையின் எதிர்புறத்துக்கு சென்றது.

பின்னர் எதிர்திசையில் வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Next Story