நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் 13–ந் தேதி நடக்கிறது


நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்  13–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 March 2020 10:00 PM GMT (Updated: 24 March 2020 2:39 PM GMT)

நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 13–ந் தேதி நடக்கிறது.

நெல்லை, 

நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 13–ந் தேதி நடக்கிறது.

குறைதீர்க்கும் கூட்டம் 

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் மண்டல ஆணையாளர் கணேஷ் குமார் ஜானியின், “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்” (வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும்) கூட்டத்தை வருகிற 13–ந் தேதி (திங்கட்கிழமை) அலுவலகத்தில் நடத்த உள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. பி காலனி, திருநெல்வேலி– 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மனுவின் மேலே “வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்” மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 9–ந் தேதிக்குள் இந்த அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

நேரில் சந்திக்கலாம் 

வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரையும், வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 3 மணி முதல் 4 மணி வரையும் கூட்டம் நடக்கிறது.

மனு அனுப்பியவர்கள் 13–ந் தேதியன்று மேற்கண்ட கால அட்டவணைப்படி மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் வீ.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Next Story