மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் + "||" + 144 by injunction The city of Vellore has been ravaged - 1,100 cops on security missions

144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார்

144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார்
144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது. பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர், 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி வேலூர் மாநகரில் இருந்த அனைத்து பழக்கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் மற்றும் திறந்திருந்த கடைகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் மூடப்பட்டது. பலர் தங்களது வீடுகளுக்கு வேக, வேகமாக சென்றனர்.

நேரம் செல்ல, செல்ல வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் நின்ற பஸ்கள் உடனடியாக பணிமனைக்கு சென்றன. பஸ் நிலையங்களில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடியது. இதையடுத்து சிறிது நேரத்தில் பயணிகளின் நடமாட்டமும் குறைந்தது.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் மாநகரின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட அவர்கள் வலியுறுத்தினர். மேலும் கூட்டமாக நின்றிருந்தவர்களை கலைத்தனர்.

இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் இருசக்கர வாகனங்களில் தீவிர ேராந்து பணியில் ஈடுபட்டனர். ஆட்டோக்கள் மூலம் 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தடை உத்தரவால் வேலூர் மாநகரமே வெறிச்சோடியது. காட்பாடி பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாவட்ட எல்லைகள் 6 உள்ளது. அந்த எல்லைகளில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் பஸ் இல்லாமல் தவித்த பயணிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
2. 144 தடை உத்தரவை மீறினால் வழக்கு மாவட்ட எல்லைகள் மூடல்
144 தடை உத்தரவை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
3. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விற்பனை: பாரில், 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தஞசையில் உள்ள மதுபான பாரில் 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள், போலீசார் சோதனையில் சிக்கியது.
4. 144 தடை உத்தரவு நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் கூட்டம் அலைமோதியது
144 தடை உத்தரவு காரணமாக நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காய்கறிகள் விலை இன்று குறைய வாய்ப்பு உள்ளது.