தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் முடங்கியது - ஊரடங்கு உத்தரவால் சாலைகள் வெறிச்சோடின
தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் முடங்கியது. தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூர்,
கொரோன வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ ஆகியோர் கடைகளை மூடும்படி அறிவுறித்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. ஒரு சில நிறுவனங்களுக்கு நேற்றே விடுமுறை விடப்பட்டன.
ஊரடங்கை முன்னிட்டு, தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் முடங்கியது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் ஊராட்சியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் நெரிசலில் நீண்ட வரிசையில் வாகனங்களும் நிற்கும் இந்த சுங்க சாவடி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
Related Tags :
Next Story