மானாமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு


மானாமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு
x
தினத்தந்தி 26 March 2020 2:30 AM IST (Updated: 26 March 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் யூனியன் தலைவர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

மானாமதுரை, 

மானாமதுரை பஞ்சாயத்துக்கு உட்பட பகுதியான முத்தனேந்தல், தீத்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள் மற்றும் சுகாதாரத்துைற அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா எனவும், கிராம மக்களுக்கு தேவையான மருந்துகள் இருகிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் தடு்ப்பு நடவடிக்கைகள் குறித்து யூனியன் தலைவர் கேட்டறிந்தார். கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் புகார்கள் குறித்து யூனியன் தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசு உத்தரவுகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுகொண்டார்.

Next Story