எழுமலை பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


எழுமலை பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 March 2020 10:45 PM GMT (Updated: 26 March 2020 12:13 AM GMT)

எழுமலை பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

உசிலம்பட்டி,

பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி, கலெக்டர் வினய் ஆகியோரின் உத்தரவுப்படியும், மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் அறிவுரையின்படியும் எழுமலை பேரூராட்சி பகுதியில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு தலைமையில் சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம், சுகாதார நிலையங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள், உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

மேலும் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் உள்ள இருக்கைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர்கள் இப்ராஹிம், சுந்தரம், பரமசிவம், செல்லப்பாண்டி, நாகராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story