சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளின் கையில் முத்திரை
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளின் கையில் ஜாமீனில் விடப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை முதல் மாநகரில் சில வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வழக்கம் போல் சாலைகளில் சென்றதை காண முடிந்தது. போலீசார் பெரிய அளவில் கெடுபிடி காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் சிறையில் இருந்த சிறு குற்ற வழக்கு விசாரணை கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளின் கையில் ஜாமீனில் விடப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து சாலைகளில், வீதிகளில் நடமாடுவதை தவிர்த்தால் மட்டுமே கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story