ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக நின்றதை கண்டித்த போலீசாருடன் தகராறு செய்தவர்கள் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக நின்றதை கண்டித்த போலீசாருடன் தகராறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பூர்,
கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறி சென்னை போர்த்துக்கீசியர் தெருவில் நேற்று சிலர் கூட்டமாக நின்றனர். அவர்களை ஏழுகிணறு போலீசார், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இப்படி கூட்டமாக நிற்க கூடாது என்று கண்டித்தனர்.
இதனால் அங்கிருந்தவர்கள், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருடன் தகராறு செய்த சாகுல் அமீது உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை முத்தியால்பேட்டை பகுதிக்கு வந்த ஒருவரை, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவர், அதையும் மீறி வெளியில் சுற்றித்திரிந்தார். இதையடுத்து அவர் மீதும் ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story