தளவாய்புரம் சாலைகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்


தளவாய்புரம் சாலைகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 March 2020 11:15 PM GMT (Updated: 26 March 2020 11:11 PM GMT)

தளவாய்புரம் மற்றும் சேத்தூர் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தளவாய்புரம், 

தளவாய்புரம் பஞ்சாயத்து 2-வது வார்டு பகுதி மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி கொம்மந்தாபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு காரணமாக தெருவில் கயிறு கட்டி ஒரு அட்டையை தொங்கவிட்டு அதில் வெளி நபர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என அப்பகுதி மக்கள் வாசகம் எழுதி வைத்துள்ளனர். தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் முதல் நிலை பஞ்சாயத்து பகுதிகளில் இன்று காலை பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் மலைக்கனி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் தெரு தெருவாக கிருமி நாசினி மருந்து தெளித்தனர். இந்த பணியின் போது பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் சேத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், முக்கிய இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பலகை வைக்கபட்டுள்ளது. இதில் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தார். மேலும் சேத்தூர் பகுதியில் உள்ள பள்ளி வளாகம் மற்றும் கடைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்றோருக்கு ஆண்டாள் கோவில் அய்யர் உணவு வழங்கினார்.

Next Story