பழம்பெரும் நடிகை நிம்மி மரணம்


பழம்பெரும் நடிகை நிம்மி மரணம்
x
தினத்தந்தி 27 March 2020 5:28 AM IST (Updated: 27 March 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

பழம்பெரும்இந்திநடிகை நிம்மி மரணம் அடைந்தார்.

மும்பை, 

பழம்பெரும் இந்தி நடிகை நிம்மி மும்பையில் வசித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஜூகு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மரணம் அடைந்த நடிகை நிம்மிக்கு வயது 88. 1949-ம் ஆண்டு வெளியான ‘பார்சாத்' படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அந்தாஷ், தீதர், ஆன், அமர், குந்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக 1986-ம் ஆண்டு வெளியான லவ் அன்டு காட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

திரையுலகினர் இரங்கல்

பைகுல்லாவில் உள்ள ரெகமாதாபாத் மயானத்தில் நேற்று மாலை 4 மணியளவில் நடிகை நிம்மியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தான் அவரது கணவர் அலி ராசாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகை நிம்மியின் மறைவுக்கு இந்தி திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story