கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பழனிமாணிக்கம் எம்.பி. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பழனிமாணிக்கம் எம்.பி. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை கலெக்டர் கோவிந்தராவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
2019-20-ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட ரு.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான 2 பணிகள் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலான 5 பணிகளுக்கான பரிந்துரையை ரத்து செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இயற்கை இடர்பாடு கொரோனா வைரஸ் தாக்குதலில் பொதுமக்களை காத்திடும் வகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கண்டறியும் உபகரணங்கள், மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வாங்கவும், கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கைள் எடுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.4 கோடியும், திருவாரூர் மாவட்டத்திற்கு(மன்னார்குடி தாலுகா) ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story