பொருட்கள் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் குழு - கலெக்டர் அருண் உத்தரவு


பொருட்கள் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் குழு - கலெக்டர் அருண் உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2020 10:31 AM IST (Updated: 27 March 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளை கொண்ட குழுவினை அமைத்து கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுவை எல்லை பகுதிகள் மூடப்பட்டு பிற மாநில வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி பால், காய்கறிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு புதுச்சேரிக்குள் நுழைய தடை இல்லை.

இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி புதுச்சேரிக்கு கொண்டுவர ஒரு குழுவினை அமைத்து கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவில் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப், வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், மாவட்ட பதிவாளர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் ஷீலா, வருவாய் அதிகாரி பிரேம்சந்தர், இளநிலை எழுத்தர் அறிவுசெல்வம், ஊழியர்கள் ரமேஷ், நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கடலூர்-விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளிடம் பேசி அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

Next Story