மாவட்ட செய்திகள்

வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் + "||" + Supply of essential items in the vehicle

வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கமுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாகனத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
கமுதி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கமுதி யூனியன் எருமைகுளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதனை தவிர்க்க எருமைகுளம் ஊராட்சி தலைவர் பெரியசாமி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாகனத்தில் கொண்டு வந்து அவர்கள் இருக்கும் இடத்திலேயே வினியோகம் செய்யப்பட்டது. மேலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, கட்டங்கள் வரையப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. 427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்
திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில் 427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
2. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவித்து உள்ளார்.
3. அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நாளை முதல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
4. அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. விழுப்புரம் நகருக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி சீட்டுடன் வந்த பொதுமக்கள் - ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் பெயிண்ட் பூசிய போலீசார்
விழுப்புரம் நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி சீட்டுடன் பொதுமக்கள் சென்றனர். ஒரே நபர் மறுபடியும் வருவதை தடுக்க வாகனங்களில் போலீசார், பெயிண்ட் பூசினர்.