நாகர்கோவிலில், ஆதரவற்றோர்களை தேடிச் சென்று இலவச உணவு வழங்க ஏற்பாடு
நாகர்கோவிலில் சுற்றி திரியும் ஆதரவற்றோர்களை தேடிச்சென்று இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆதரவற்று, சாலைகளில் சுற்றித்திரியும் நபர்களுக்கு மாநகராட்சி, தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை, எளியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவசமாக உணவு சமைத்து வழங்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி நாகர்கோவில் மாநகரில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரம் பேருக்கு இந்த உணவகம் மூலம் உணவு சமைக்கும் பணி நடக்கிறது. காலையில் தலா 4 இட்லி வீதம் 1000 பார்சல்களும், மதியம் தயிர்சாதம் போன்ற கலவை சாதம் 1000 பார்சல்களும், இரவு தலா 4 இட்லி வீதம் 1000 பார்சல் களும் தயார் செய்யப்படு கிறது.
இவ்வாறு தயார் செய்யப்படும் பொட்டலங்களை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக பணிபுரியும் 25 பேர் இருசக்கர வாகனங்கள் மூலமும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு அறிவிப்பு வாகனங்கள் மூலமும் வினியோகம் செய்யப்படுகிறது. அம்மா உணவகத்தை தேடி உணவருந்த வரும் ஆதரவற்றோருக்கு அங்கேயே பார்சல்களாக கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த இலவச உணவு வழங்கப்பட்டது என்று மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்தார்.

Related Tags :
Next Story