சீர்காழியில், அம்மா உணவகத்தை பாரதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
சீர்காழியில் அம்மா உணவகத்தை பாரதி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
சீர்காழி,
அப்போது ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதி கார்த்திக், வக்கீல் நெடுஞ்செழியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், மணி, மருது ஆகியோர் உடனிருந்தனர்.
சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை பாரதி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் வசந்தன் ஆகியோரிடம் அம்மா உணவகத்தில் தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்கப்படுகிறது என்ற விவரத்தை கேட்டறிந்தார். மேலும் உணவகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள அறிவுறுத்தினார். உணவகத்திற்கு போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பான்மையான உணவகங்கள் செயல்படாத நிலையில் அம்மா உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் விலையில்லாமல் உணவு வழங்க கேட்டு கொண்டார். தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களையும், போதுமான அளவு மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதா? எனவும் கேட்டறிந்தார்.
அப்போது ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதி கார்த்திக், வக்கீல் நெடுஞ்செழியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், மணி, மருது ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story