நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 14 நாட்கள் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா பேட்டி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 14 நாட்கள் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் கிருமி நாசினி தெளக்கும் பணி மற்றும் தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஷில்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொது போக்குவரத்து, பொழுது போக்கு இடம் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள் போன்றவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவ வசதி கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வெளநாடுகள் மற்றும் வெள மாநிலங்களில் இருந்து வந்துள்ள 2,500 பேர் அவவரர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பொது மக்கள் வீடுகளை விட்டு அன்றாட தேவை பொருட்களை வாங்க வெளயே வரக்கூடாது என்ற அடிப்படையில் வீட்டுக்கே சென்று பொருட்கள் வழங்கும் சேவகைளும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி கடைகளும் பொதுமக்கள் இருப்பிடம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோரிடம் இருந்து விலகி இருப்பது முக்கியம் ஆகும். தங்கள் குடும்பத்தில் அனைவரும் வீட்டில் வெள தொடர்பு இன்றி தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது உடைகள் மற்றும் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி அல்லது மாவட்ட அரசு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி 14 நாட்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0462 2501070 ஆகிய தொலைபேசி எண்களையும், 6374013254 மற்றும் 6374001902 ஆகிய வாட்ஸ் அப் எண்களையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
அப்போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story