பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 March 2020 8:45 PM GMT (Updated: 28 March 2020 7:28 PM GMT)

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 91.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 1,900 கன அடியும், பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நேற்று மதியம் 2 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 977 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 1,900 கன அடியும், பவானி ஆற்றுக்கு 1,100 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 90.86 அடியாக இருந்தது.

Next Story