மதுபாட்டில்கள் பதுக்கல்; 3 பேர் கைது


மதுபாட்டில்கள் பதுக்கல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2020 2:45 AM IST (Updated: 29 March 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு, 

சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளியில் உள்ள முட்புதரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைப்பதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்ட 800 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாரி (வயது 45), சுப்பாயாள் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் அறச்சலூர் அருகே அழகுகவுண்டன்வலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மதுபாட்டில்களை அறச்சலூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்கிற சுப்பிரமணி (44) என்பவரை கைது செய்தனர்.

Next Story