ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு; மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை,
மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதான கட்டிட காண்டிராக்டர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கட்டிட காண்டிராக்டரின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரி தனி வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரும் தனி வார்டில் சேர்க்கப்பட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்ட இவர்கள் 3 பேரையும் மதுரை பெரிய ஆஸ்பத்திரி டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story