ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்


ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 29 March 2020 3:45 AM IST (Updated: 29 March 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதிக்கு உட்பட்ட 21 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளுக்காக 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 21 ஊராட்சி பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இப்பணிகளை யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் யூனியன் அலுவலகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் சந்திரபிரபா எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

Next Story