திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 36 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் 36 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது.
திருச்சி,
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. முக்கியமாக மக்கள் கூடும் காய்கறி மார்க்கெட் இடமாற் றம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வரு கின்றன. அதில் தென்னூர் அண்ணாநகரில் உள்ள உழவர் சந்தை திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
தென்னூர் உழவர் சந்தையில் மொத்தம் 80 கடைகள் உள்ளன. இதில் முதல்நாளான நேற்று 36 கடைகள் மத்திய பஸ் நிலையத்தில் இயங்கின.அந்தந்த கடைகளின் முன்பு கோடு போட்டு மக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் சென்ற னர்.
வழக்கமாக இந்த கடை கள் அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல் பட அனுமதிக்கப் பட்டு உள்ளது. ஆனால் முதல் நாளான நேற்று சிறிது கூடுதல் நேரம் ஒதுக்கி செயல்பட அனுமதிக் கப்பட்டன. 80 கடை களும் அங்கு வந்து முறைப்படி செயல் படத் தொடங்கியதும் நேர கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தவிர மாவட் டத்தில் மேலும், 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வரு கின்றன. இதில் கே.கே. நகர் உழவர் சந்தை அதே இடத் திலும், திருவெறும்பூர் உழவர் சந்தை பாய்லர் ஆலை வளா கத்திலும் செயல்பட்டு வருகின் றன. முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய 3 இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் அருகே உள்ள பள்ளி மைதானங்களில் செயல்பட தொடங்கி உள்ளன.
Related Tags :
Next Story