காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா ரத்து
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கோவில்கள் மூடப்பட்டு உள்ளன.
இதனால் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறுவதாக இருந்த பங்குனி உத்திர பெருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோவிலில் ஆகம விதிப்படி நித்திய பூஜைகள் நடைபெறும். அரசின் மறு உத்தரவு வரும்வரை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவையொட்டி நகரமே மக்கள் நடமாட்டமின்றி உள்ளதால் கோவிலில் உள்ள உற்சவ சிலைகள் மற்றும் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு மிக அவசியமாகின்றது.
எனவே, இக்கோவிலின் அவசர அவசியம் கருதி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story